சுகாட்லாந்து வடமேற்கு ஐரோப்பாவில் பெரிய பிரித்தானியத் தீவில் உள்ள நாடு. இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பாகமாகும். இதன் கிழக்கில் வட கடலும், வடமேற்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும், தென்மேற்கில் வ…சுகாட்லாந்து வடமேற்கு ஐரோப்பாவில் பெரிய பிரித்தானியத் தீவில் உள்ள நாடு. இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பாகமாகும். இதன் கிழக்கில் வட கடலும், வடமேற்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும், தென்மேற்கில் வடக்குக் கால்வாயும் ஐரியக் கடலும் சூழ்ந்துள்ளது. இதன் தெற்கில் இங்கிலாந்துடன் தனது எல்லையைக் கொண்டிருக்கிறது. முதன்மையான பெரும் தீவு மட்டுமின்றி 790க்கும் மேற்பட்ட சிறு தீவுகளும் சுகாட்லாந்தில் அடங்கும்.