மெக்சிகோ வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஒரு கூட்டாட்சி அரசமைப்புக் குடியரசு நாடாகும். முறைப்படி இது ஐக்கிய மெக்சிக்க நாடுகள் என அழைக்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகள் இதன் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது. தெற்…மெக்சிகோ வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஒரு கூட்டாட்சி அரசமைப்புக் குடியரசு நாடாகும். முறைப்படி இது ஐக்கிய மெக்சிக்க நாடுகள் என அழைக்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகள் இதன் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது. தெற்கிலும், மேற்கிலும் பசிபிக் பெருங்கடல் உள்ளது. தென்கிழக்கு எல்லையில் குவாத்தமாலா, பெலிசே ஆகிய நாடுகளும் கரிபியக் கடலும் உள்ளன. கிழக்கு எல்லையில் மெக்சிகோ குடா அமைந்துள்ளது. ஏறத்தாழ இரண்டு மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மெக்சிகோ, பரப்பளவு அடிப்படையில் அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஐந்தாவது பெரிய நாடும், உலகில் 13-ஆவது பெரிய விடுதலை பெற்ற நாடும் ஆகும். 113 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் 11-ஆவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இது விளங்குவதுடன், உலகில் அதிக மக்கள் எசுப்பானிய மொழி பேசும் நாடும் இதுவாகும். இதன் தலைநகரம் மெக்சிகோ நகரம். மெக்சிக்கோவின் கூட்டாட்சி அமைப்பில் 31 மாநிலங்கள் இணைந்துள்ளன. இவற்றோடு தலைநகரம் கூட்டாட்சி மாவட்டமாக இருக்கிறது.