சாவகம் என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். அத்துடன் இந்தோனீசியத் தலைநகர் சகார்த்தாவும் இங்குள்ளது. இந்து மன்னர்களினதும், பின்னர் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திலும் இருந்த சாவகம் இப…சாவகம் என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். அத்துடன் இந்தோனீசியத் தலைநகர் சகார்த்தாவும் இங்குள்ளது. இந்து மன்னர்களினதும், பின்னர் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திலும் இருந்த சாவகம் இப்போது இந்தோனீசியாவின் பொருளாதாரம், மற்றும் அரசியலில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. 2006 இல் 130 மில்லியன் மக்கள் தொகையை இது கொண்டிருந்தது. இதுவே உலகின் மிகவும் மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும்.