இந்தோனேசியா அல்லது இந்தோனேசியக் குடியரசு என்பது தென்கிழக்காசியா, மற்றும் ஓசியானியா பகுதிகளில் 17,508 தீவுகளைக் கொண்ட நாடாகும். இந்த நாட்டில் 33 மாநிலங்கள் உள்ளன. இந்த நாட்டில் 275 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். …இந்தோனேசியா அல்லது இந்தோனேசியக் குடியரசு என்பது தென்கிழக்காசியா, மற்றும் ஓசியானியா பகுதிகளில் 17,508 தீவுகளைக் கொண்ட நாடாகும். இந்த நாட்டில் 33 மாநிலங்கள் உள்ளன. இந்த நாட்டில் 275 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். உலகில் மக்கள் தொகை கூடிய நாடுகளில் இந்தோனேசியா நான்காவது இடத்தில் உள்ளது. உலகில் மிக அதிகமான முசுலிம் மக்களைக் கொண்ட நாடு. மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தையும், அதிபரையும் கொண்ட ஒரு குடியரசு. சகார்த்தா பெருநகரம் இந்த நாட்டின் தலைநகரம். பப்புவா நியூ கினி, கிழக்குத் திமோர், மலேசியா ஆகிய நாடுகள் இந்த நாட்டின் எல்லைகளில் உள்ளன.