யப்பான் அல்லது சப்பான் என்பது ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான நாடாகும். இது பசிபிக்குப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. தோக்கியோ இதன் தலைநகர…
யப்பான் அல்லது சப்பான் என்பது ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான நாடாகும். இது பசிபிக்குப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. தோக்கியோ இதன் தலைநகராகும். சப்பான் மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது. ஒக்கைடோ, ஒன்சூ, சிகொக்கு, கியூசூ ஆகியன சப்பானின் முக்கியமான, மற்றும் 97 சதவீத நிலப்பரப்பை உள்ளடக்கிய நான்கு பெரிய தீவுகளாகும்.மேலும் இது 12.6 கோடி மக்கட்தொகையுடன் உலகின் 11 வது இடத்தை பிடித்துள்ளது.