உருமேனியா, ரொமானியா அல்லது ரொமேனியா என்பது ஐரோப்பாவின் நடு, கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளின் குறுக்கே அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக, தெற்கே பல்காரியா, வடக்கே உக்ரைன், மேற்கே அ…
உருமேனியா, ரொமானியா அல்லது ரொமேனியா என்பது ஐரோப்பாவின் நடு, கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளின் குறுக்கே அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக, தெற்கே பல்காரியா, வடக்கே உக்ரைன், மேற்கே அங்கேரி, தென்மேற்கே செர்பியா, கிழக்கே மல்தோவா ஆகிய நாடுகளும் தென்கிழக்கே கருங்கடலும் அமைந்துள்ளன. இது முக்கியமாக மிதவெப்ப-கண்டக் காலநிலையையும், 238,397 சதுர கி.மீ. பரப்பளவையும் கொண்டுள்ளது. இங்கு கிட்டத்தட்ட 19 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். உருமேனியா ஐரோப்பாவின் 12-ஆவது பெரிய நாடும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறாவது மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடும் ஆகும். புக்கரெஸ்ட் இதன் தலைநகரும், மிகப் பெரிய நகரமும் ஆகும், உருமேனியா ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஐரோப்பியப் பேரவை, உலக வணிக அமைப்பு ஆகிய அமைப்புகளில் உறுப்புரிமையைக் கொண்டுள்ளது.